மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி, வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது. கரூர் பஸ் நிலையத்தில், 17 வயது பள்ளி மாணவன், பள்ளி சீருடையுடன் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில், அந்த மாணவன் படம் வெளியானதால், மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மாணவனின் எதிர்காலம் கருதி, அவனுக்கு கவுன்சிலிங் அளிக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச் செல்வி, நன்னடத்தை அலுவலர் கணேசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மஞ்சு, அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்னம்மாள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாணவன் மற்றும் பெற்றோரை அழைத்து, 'கவுன்சிலிங்' வழங்கினர். அவர்கள் அளித்த உத்தரவாதத்தின் பேரில், மாணவனை மீண்டும், அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை