Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு

மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதை வலியுறுத்தி, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், மலை, வனம் மற்றும் எளிதில், பாதுகாப்பாக செல்ல முடியாத பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, வாகன வசதி மற்றும் பாதுகாவலர் நியமிக்க வேண்டும். இதையடுத்து, 18 மாவட்டங்களில், மாணவர்களுக்கு வாகன வசதி, பாதுகாப்பு தேவையான பகுதிகள், பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இப்பள்ளிகளில், தொடக்க கல்வியில், 9,510; அதற்கு மேல், 2,785 என, 12,295 பேருக்கு, வேன், ஜீப், ஆட்டோ மற்றும் பாதுகாவலர் வசதி, வரும், 2015 - 16ம் கல்வியாண்டிற்கு செய்யப்பட உள்ளது. இதுகுறித்த, பள்ளி கல்வித் துறை செயலர் அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement