Ad Code

Responsive Advertisement

நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?

பள்ளிகளில், நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. சந்தோஷ் சிங் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
தற்போது, இளைஞர்களிடையே நல் ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்றுத் தர தவறியது தான் இதற்கு காரணம். பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, நீதி போதனையை கட்டாய பாடமாக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement