Ad Code

Responsive Advertisement

மனதின் குரல் நிகழ்ச்சி: மாணவர்களுடன் உரையாட பிரதமர் ஆலோசனை

பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இம்மாதம் மனதின் குரல் வானொலி உரையில் ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் தெரிவித்தது,

இம்மாதம் நடைபெறும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நிகழ்ச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்து வருகிறேன்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், போட்டித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement