Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை (பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பிப்ரவரி இறுதிவரை நடைபெறும் இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

தொழில் பிரிவு மாணவர்களுக்கு 2 பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 2,300 தேர்வு மையங்களில் சுமார் 8.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

இவர்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement