Ad Code

Responsive Advertisement

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் : மாணவர்கள் கோரிக்கை

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் அசோக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்.
சான்று சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் பார்வையற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும். பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 100 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை சிறப்பு நேர்காணல் நடத்தி நிரப்ப வேண்டும். பார்வையற்றோருக்கு கடந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது போல இந்த ஆண்டும் பார்வையற்றோருக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றை நடத்த அரசு ஆவன செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் இருந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement