Ad Code

Responsive Advertisement

சுகாதாரமற்ற பள்ளி கழிப்பறைகள்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை

 'பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம்' என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா பந்த் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: பள்ளிகளில் எவ்வித அடிப்படை வசதி களும் இன்றி பெயரளவிலான கழிப்பறைகள் இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது. இருபாலர் பள்ளியிலும், பெண்கள் பள்ளியிலும் கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுகின்றன. போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், முழு வசதிகளுடனான கழிப்பறைகள் இருப்பது அவசியம். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement