Ad Code

Responsive Advertisement

ஆற்றல்சார் கல்லூரித் திட்டம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

ஆற்றல்சார் கல்லூரித் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சேகரித்து வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையிலும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆற்றல்சார் கல்லூரித் திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கல்லூரிகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, ஆய்வு செய்து தில்லியிலுள்ள யுஜிசி அலுவலகத்துக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்காக பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் தலைமையில் பதிவாளர், கல்லூரி மேம்பாட்டு கவுன்சில் டீன், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்து இரண்டு அல்லது மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து அனுப்ப வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement