Ad Code

Responsive Advertisement

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 44 மாதிரிப் பள்ளிகள், 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை இந்தக் குழு பார்வையிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்டல கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் துரைசாமி, உலக வங்கியின் இரண்டு பிரநிதிகள் ஆகியோரும் மத்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement