Ad Code

Responsive Advertisement

தொடக்கக் கல்வி ஆசிரியர் தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜனவரி 19முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர், அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50, சேவைக் கட்டணம் ரூ.15 ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 19 முதல் 24-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement