கடலூர் அடுத்த சாமியார்பேட்டையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, வரலாறு பட்டதாரி ஆசிரியராக, நந்தகுமார் என்பவர் வேலை பார்க்கிறார். இவர் தினமும், பள்ளிக்கு வந்தாலும், பாடம் எடுப்பதில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து, வகுப்பு மாணவர்கள், கடந்த, 2ம் தேதி, கலெக்டரை சந்தித்து, புகார் தெரிவித்தனர். 'பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் வரலாறு பாடங்களை, ஆசிரியர் முடிக்கவில்லை. நாங்கள், வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகமாக உள்ளது' என, கலெக்டரிடம் தெரிவித்தனர். மாணவர்களைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, கலெக்டர், சுரேஷ் குமாரின் உத்தரவின்படி, முதன்மைக் கல்வி அலுவலர், பாலமுரளி, சாமியார்பேட்டை பள்ளியில் விசாரணை நடத்தினார். அதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதனால், ஆசிரியர், நந்தகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று, சி.இ.ஓ., உத்தரவிட்டார். நந்தகுமார், ஏற்கனவே நெல்லிக்குப்பம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது, இதே குற்றச்சாட்டின் பேரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை