Ad Code

Responsive Advertisement

உலகத் தமிழ் மக்களுக்கு ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,






உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமையுடையவர்கள் என்னும் பொருள்பட உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத்தோர்க்கு உணர்த்தியுள்ளார்.

அத்தகைய சிறப்பு மிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைபொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்துக்கு அச்சாரமாகத் திகழ்கின்ற கால்நடைகளுக்கு, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.

அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement