Ad Code

Responsive Advertisement

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மாணவ, மாணவிகள் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.500 பெறும் வகையில், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்பதற்கு, நிகழாண்டில் 8ஆம் வகுப்பு படித்து வருபவராக இருக்கவேண்டும்.இத்தேர்வை எழுத, இம்மாவட்டத்தைச் சேர்ந்த 267 பள்ளிகளில் இருந்து 4,809 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காக, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் 17 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இத்தேர்வு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 3ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னரும் தேதி மாற்றப்பட்டு, தற்போது ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது.பெயர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்பட இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement