Ad Code

Responsive Advertisement

உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருப்பது எப்படி?

நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

               குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோர்கள் செய்யும் பல தவறுகளில் முக்கியமான ஒன்றாகும். ஒன்று குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்த நினைப்பது, இல்லையென்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. சில பெற்றோர்கள் தங்கள் அதிகாரத்தன்மையை குழந்தைகளிடம் வெளிக்காட்டுவார்கள். இதனை கண்டு பயப்படும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் எதிரில் பேசவே பயப்படுவார்கள்.

அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை தங்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். அதே போல் குழந்தைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விசும் பெற்றோர்களும் ஆச்சரியம் காத்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை மதிப்பதே இல்லை. அதனால் சரியான அளவில் கட்டுப்பாடு தேவை. அப்படி செய்யும் போது, உங்கள் குழந்தையிடம் நல்ல நண்பனாகவும் உங்களால் இருக்க முடியும்.
                               
                  உங்கள் குழந்தைகள் தவறு செய்தால், அவர்களுக்கு தேவை உங்களின் வழிகாட்டலே தவிர எரிச்சல் அல்ல. அதனால் குழந்தை பார்த்து கத்தவோ பயமுறுத்தவோ செய்யாதீர்கள். அது அவர்களை பயமுறுத்தும். மாறாக, பொறுமையாக அவர்களுக்கு சரியான விஷயங்களை பற்றி எடுத்துரைங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் அவர்களின் மீது பாயாமல், அவர்களிடம் பொறுமையாக நல்லது எது, கேட்டது எது என தெரியப்படுத்துங்கள்.

                 குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான வந்தம் மிக முக்கியமானதாகும். உங்கள் குழந்தையின் இதத்தில் இடம் பிடிக்க, சில நேரம் அவர்களை ஈர்ப்பதற்காக, சின்ன சின்ன பரிசுகளை வாங்கிக் கொடுங்கள். இருப்பினும் அது ஒரு பழக்கமாக மாறி விடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களுக்கு பரிசினை வாங்கி கொடுத்து அசத்துங்கள். அப்படிப்பட்ட தருணத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.


ஒவ்வொரு தருணத்திலும் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ச்சி ரீதியாக உங்கள் குழந்தை உணர வேண்டும். அதற்கு, அவர்களுக்காக அவர்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு முதலில் ஏற்படுத்துங்கள். ஆனால் அதற்காக அவர்களின் அனைத்து விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைப்பீர்கள் என்பதில்லை. அவர்களின் மனதில் ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வீண்டும். அது உங்கள் சொற்கள் மற்றும் செயல்களாலேயே முடியும். இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement