Ad Code

Responsive Advertisement

"வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'

வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை கூறினார்.

செயின்ட் ஜான்ஸ் ஆசிரியர் மேம்பாட்டு மையத் தொடக்க விழா, கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:

ஆசிரியர்களின் பணி கற்பித்தலோடு முடிவடைவதில்லை. வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தொடர்ச்சியாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சிகளில் பங்கேற்று தங்களது கற்பித்தல் முறைகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். பாடங்கள் குறித்தும், கற்பிக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், என்றார் அவர்.

இந்த மையத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் பயிற்சிகள் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் இல்லாமல் பொதுவாக ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும் என செயின்ட் ஜான்ஸ் பொதுப்பள்ளியின் தாளாளரும், செயின்ட் ஜான் ஆசிரியர் மேம்பாட்டு மைய உறுப்பினருமான கிஷோர் குமார் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement