Ad Code

Responsive Advertisement

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு ரேஷன்கார்டு: கேரள முதல்வர் உம்மன்சாண்டி நடவடிக்கை

 ஓன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனை குடும்ப தலைவராக்கி ரேஷன் கார்டு வழங்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். திருச்சூரை சேர்ந்தவர் பிரேமச்சந்திரன். மனைவி ரஜனி. இவர்களுக்கு விசாக் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் பிரேமச்சந்திரனும், ரஜனியும் இறந்து விட்டனர். தனிமையில் தவித்த இரண்டு குழந்தைகளையும், இவர்களது பெரியப்பா வளர்த்து வந்த நிலையில் அவரும் நோய்வாய்பட்டு செயல்பட முடியாத நிலையடைந்தார். இதையடுத்து பாட்டியின் பராமரிப்பில் இருவரும் வளர்ந்து வருகின்றனர். விசாக் 9ம் வகுப்பும், பவித்ரா 4 ம் வகுப்பும் படிக்கின்றனர். தாய் தந்தை இறந்ததால் இவர்களின் ரேஷன்கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருச்சூரில் தேசிய விளையாட்டு போட்டி மைதான திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் உம்மன்சாண்டியிடம் இந்த குழந்தைகளை அழைத்து சென்று முறையிட்டனர். அந்த இடத்திலேயே அவர்களுக்கு விதிகளை தளர்த்தி ரேஷன் கார்டு வழங்க அவர் உத்தரவிட்டார். குடும்ப தலைவர் இடத்தில் விசாக் பெயரும் போட்டோவும் இருக்கும். தங்கை பவித்ராவின் பெயர் உறுப்பினர் பட்டியலில் இருக்கும். மேலும் இருவரது பெயரிலும் தலா 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யவும், பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement