தஞ்சாவூரில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கின்னஸ் சாதனைக்காக 4,000 மாணவ, மாணவிகள் காகிதத் தொப்பி அணிந்து சனிக்கிழமை பங்கேற்றனர்.
இதன்படி, தஞ்சாவூர் தொன்போஸ்கோ பள்ளியிலும், அக்ஸீலியம் பள்ளியிலும் போஸ்கோரி மாநாடு கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. இதில், நாடு முழுவதும் உள்ள சலேசிய சபையின் பள்ளிகளைச் சேர்ந்த 4,000 சாரண, சாரணீயர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நியூசிலாந்தில் சாரண, சாரணீயர்கள் 3,045 பேர் பங்கேற்று காகிதத் தொப்பி அணிந்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை முறியடிக்கும் நிகழ்ச்சி முகாமின் நிறைவு நாளான சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 4,000 மாணவ, மாணவிகள் தொன் போஸ்கோ அணிந்திருந்த பெரேத்தோ என்ற தொப்பியை நினைவுகூரும் வகையில், அதே வடிவில் காகிதத் தொப்பியைத் தயார் செய்து அணிந்து சுமார் 15 நிமிஷங்கள் நின்றனர்.
இந்தத் தொப்பியைச் செய்ய பழைய செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதன் மூலம் மறுசுழற்சி செய்யும் கருத்தியலையும், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டது என சலேசிய சபை சாரண இயக்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை அசிஸ்ட் என்ற உலக சாதனை ஆய்வு மையத் தலைவர் ராஜேந்திரன், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் அருண் தாமஸ் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியை திருச்சி சலேசிய சபையைச் சேர்ந்த ஆல்பர்ட் ஜான்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை