Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம். தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்த பிறகு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்யலாம். எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேரவில் மீண்டும் பங்கேற்பதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வர வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் மொழிப்பாடங்களில் உள்ள கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்.

இந்தத் தேர்வுகளுக்கான தேதி குறித்து தங்களுடைய தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்லாமல், எந்தவொரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement