Ad Code

Responsive Advertisement

SSLC தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!!

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத  விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது தங்கள் பெயர்களை பதிவு செய்யாமல் விடுபட்ட தனித்தேர்வர்களும், 8-வது வகுப்பு தேர்வில் தேர்ச்சியுற்ற தனித்தேர்வர்களும் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் மாதம் எழுத விரும்பினால் 12-12-2014 (வெள்ளிக்கிழமை) வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் தங்களது பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெறலாம். செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்குரிய பள்ளிகளின் விவரங்களை அரசுத்தேர்வுகள் சேவை மையங்களை அணுகி தெரிந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் அரசுத்தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement