Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது SCERT

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், ''தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement