தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கர், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை லட்சுமி ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை பணிக்குச் சென்றனர். பள்ளி நேரம் முடிவடைந்த பிறகு, பள்ளிகளுக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர்
பி.இளங்கோவன் கூறியது:
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும். ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்தால் வருவாய் அதிகாரி, கல்வி அதிகாரி, காவல்துறை அதிகாரி கொண்ட குழு முதலில் விசாரணை நடத்த வேண்டும்.
இந்தக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்களுக்கு உள்ளது போன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர் என்றார் அவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை