உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
அதேபோல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகையை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு மதிப்பெண் சலுகை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமனத்துக்காகப் பின்பற்றப்படும் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடிந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை