Ad Code

Responsive Advertisement

பாரதிக்கு மாணவர்கள் கவிதாஞ்சலி

எட்டயபுரத்தில் மகாகவி பாரதிக்கு மாணவர்கள் கவிதாஞ்சலி செலுத்தினர். கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை, ரோட்டரி சங்கம், நேரு யுவகேந்திரா ஆகியன சார்பில் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா எட்டயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரதி மணிமண்டபம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், எட்டயபுரம் வட்டாட்சியர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், பெண் கல்வி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும்விதமாக, கையில் தேசியக்கொடியுடன் பாரதி வேடமணிந்த பள்ளி மாணவர், மாணவியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உறுதிமொழியேற்றனர். மணிமண்டபத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, பாரதிக்கு மகாகவி பட்டத்தை வழங்கிய எட்டயபுரம் சமஸ்தான மன்னர் அரண்மனை வளாகத்தைச் சென்றடைந்தனர். அங்கு மாணவர்கள் கவிதை பாடி பாரதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜபெருமாள், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், எட்டயபுரம் மாரியப்பநாடார் நடுநிலைப் பள்ளி, செங்குந்தர் நடுநிலைப் பள்ளி, தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாரதி இல்லக் காப்பாளர் மோகன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement