Ad Code

Responsive Advertisement

காமராஜர் பல்கலை: ஆதிதிராவிட மாணவர்களுக்கு நெட் தகுதித் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்

புது தில்லி பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியோடு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், நெட், செட் ஆகிய தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம், என பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. சின்னையா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையும் நடைபெறும். யுஜிசி-நெட் முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகள் 11 மாதிரி தேர்வுகளுடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும்.

இவ்வகுப்புகளில் பங்கேற்க, டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரங்களை, நேரிலோ அல்லது கீழ்காணும் முகவரிக்கோ, ஒருங்கிணைப்பாளர், யுஜிசி-நெட் செட் பயிற்சி மையம், மேலாண்மையியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை-21 என்ற அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய 0452-2456100 என்ற எண்ணிலோ அல்லது மதுரை பல்கலைக்கழக இணையதள முகரியிலோ தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement