Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை!!!

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது.
அதை 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்று டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், ‘அப்படி ஒரு திட்டம் இல்லை’ என்று எழுத்துமூலம் பதில் அளித்தார்.
ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையை சுமுகமாக நடத்துவதற்கு உதவும் வகையில், ஓய்வு மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாகவும், முதல்கட்டமாக 2 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.
பின்னடைவு பணியிடம்
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், ‘ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை பொது பிரிவினரைக் கொண்டு நிரப்பும் திட்டம் இல்லை’ என்று பதில் அளித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement