Ad Code

Responsive Advertisement

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி திங்கட்கிழமை தொடக்கம்!!

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி திங்கட்கிழமை தொடக்கம்

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு (குடும்ப அட்டையில்) காலத்தை நீட்டிக்கும் வகையில் உள்தாள் ஒட்ட அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று உள்தாள் ஒட்டலாம். இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:–

வருகிற திங்கட்கிழமை (15–ந்தேதி) முதல் குடும்ப அட்டையில (ரேஷன் கார்டு) உள்தாள் ஒட்டுவதற்கு கடை பணியாளர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமும் 75 முதல் 125 அட்டைதாரர்களுக்கு உள்தாள்களை வழங்கும் வகையில் அவர்களுக்கான குடும்ப அட்டை எண்கள், நியாய விலைக்கடைகளின் பெயர் பலகையில் ஒட்டப்படும்.
உள்தாள் ஒட்டும் பணியுடன் சேர்த்தே அத்தியாவசிய பொருட்களையும் வினியோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி காலை அல்லது மாலை நேரங்களில் வசதிக்கேற்றபடி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.
சுமார் 15 நாட்களுக்குள் உள்தாள் ஒட்டும் பணிகளை முடிக்க நியாய விலைக்கடை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட குடும்ப தலைவர் கடைக்கு செல்ல வேண்டும். அல்லது ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் செல்லலாம்.
குடும்ப தலைவரை தவிர்த்து வேறு யாரேனும் செல்ல விரும்பினால் அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு உள்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement