Ad Code

Responsive Advertisement

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி

பட்டப்படிப்பு, மேல்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது தொடர்பாக அரக்கோணம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி. ஹரி மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்:

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, மேல்படிப்பு, ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளும் நம் நாட்டு மாணவர்களுக்கு "எம்எச்ஆர்டி பயிற்சி திட்டம் -2014' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஆய்வாளர்கள் அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement