Ad Code

Responsive Advertisement

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்? சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் வாங்கியதற்கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

ஆதார் அடையாள அட்டை மற்றும் தற்போது வசிக்கும் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் தற்போது வசிக்கும் முகவரியை நிரூபிப்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலையில் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடு இருக்கவேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement