Ad Code

Responsive Advertisement

ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரம் தலைமறைவு மாணவனை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரி தகவல்

பள்ளியில் உள்ள ஆசிரியர்களை தொடர்ந்து தாக்கி வரும்  மாணவனை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று  திருவள்ளூர் கல்வி மாவட்ட அதிகாரி கூறினார்.
மதுரவாயல் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் +2 ஆசிரியை பாடத்தை  லட்சுமியை என்ற ஆசிரியை +2 மாணவன் கண்ணத்தில் அறைந்தான்.  இதில் ஆசிரியையின் காது ஜவ்வு கிழிந்தது. பயந்துபோன மாணவன்  தப்பியோடினான். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் கல்வி மாவட்ட  அதிகாரி சந்திரசேகர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இது குறித்து  கேட்டறிந்தார். அப்போது தாக்கப்பட்ட ஆசிரியை லட்சுமி, நான் காவல்  நிலையத்தில் முறைப்படி புகார் தரவில்லை. பள்ளியில் எடுக்கும்  நடவடிக்கையே போதுமானது. மாணவரை பழிவாங்க வேண்டும் என்ற  நோக்கம் எனக்கு இல்லை என்றார்.

இது குறித்து சந்திரசேகர் கூறும்போது, பள்ளி மாணவன் ஆசிரியையை  அடித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுங்கீன செயல். அடித்த மாணவர்  தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரித்து, எழுத்துப்பூர்வமான  விளக்கத்தை பெற்ற பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இருந்தபோதிலும் இந்த மாணவர் இதே பள்ளியில் கடந்த வருடம்  ஆசிரியர் ஒருவரை தாக்கியுள்ளார். ஆகவே, இவரை பள்ளியை விட்டு  நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement