கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இதுகுறித்த செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் காலியாக உள்ள, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வை, ஜூன் மாதம், டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. அதில். 7,63,880 பேர் பங்கு பெற்றனர். இவர்களில், 6,71,506 பேரின் மதிப்பெண் மற்றும் தர வரிசை பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பொது தர வரிசை நிலை, வகுப்பு வாரியான தர வரிசை நிலை, சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசை நிலையும், வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தர வரிசை நிலை ஆகியவற்றை, பதிவு எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், தங்கள் இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி, இனம், சிறப்பு பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில், தர வரிசை நிலை வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது என தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், தர வரிசை நிலை, காலியிடம் மற்றும் இட ஒதுக்கீட்டு விதி அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். அந்த பட்டியல், விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை