Ad Code

Responsive Advertisement

உதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற்சி

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நாளை மறுதினம் சென்னையில் நடைபெற உள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின்  கீழ் பணிபுரியும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி 8 மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வரும் 16ம் தேதி  சென்னையில் உள்ள ‘சீமாட்‘ கூட்ட அரங்கில் தொடங்கி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.
அனைத்து உதவி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள்,  அறிவியல் மற்றும் மழலையர் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், இந்த பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

மொத்தம் 649 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில்  நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வரும்  ஜனவரி மாதம் 28ம் தேதியும், குமரி மாவட்டத்திற்கு ஜனவரி 29ம் தேதியும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement