Ad Code

Responsive Advertisement

ஆசிரியரை தாக்கிய வழக்கில் 36 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மாணவனின் தந்தை அருளானந்தம் உள்ளிட்ட 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் 20ம் தேதி உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் (39), விசில் அடித்ததை கேலி செய்த மாணவன் அர்னால்டை கன்னத்தில் அடித்துள்ளார்.
இதுபற்றி அறிந்த மாணவனின் தந்தை அருளானந்தம், தனது ஆட்களுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பாஸ்கரை தாக்கினார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய கோடம்பாக்கம் போலீசார் 35 பேரை கைது செய்து அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை முயற்சி செய் தல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அருளானந்தமும் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி அருளானந்தம், குமார், மகேஷ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. அரசு வக்கீல் சண்முகவேலாயுதம், மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆகியோர் ஆஜராகி, படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை தங்களின் செல்வாக்கால் கலைத்துவிடுவார்கள். எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என்றனர். இதையடுத்து, 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement