Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த ஜூன் மாதம் நடந்த, குரூப் - 2ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: தமிழக அரசில், குரூப் - 2ஏ பிரிவில் அடங்கிய, உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்கர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளில், 2,846 காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, கடந்த ஜூன் 29ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இந்த தேர்வில், 4,21,486 பேர் பங்கு பெற்றனர். இதில், 4,11,339 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை தகவல்கள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தர வரிசை நிலையை, பதிவு எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தர வரிசை நிலை, காலியிட நிலை மற்றும் இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement