Ad Code

Responsive Advertisement

டிச.23-இல் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுப் பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்தி:

சென்னை காந்திமண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மின்னணுப் பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

இந்தப் பயிற்சி முகாமில் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெறலாம். இதில் அடிப்படை மின்னணுவியல், மின்னணு பாகங்கள், பல்வேறு துறைகளில் மின்னணு பயன்பாடு உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் 044-24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement