Ad Code

Responsive Advertisement

டிசம்பர் 16 - 1971 இந்தியா பாகிஸ்தான் போர் வெற்றித் திருநாள்

நம் நாடு ஒரு மகத்தான, தீர்மானமான!!! வெற்றியை அடைந்த நாள்.

உலகம் காணாத அதிசயமாக தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு அரசு அதன் இனவெறி காரணமாக கொன்றொழிக்க முற்பட்டது. ஆம், பாகிஸ்தான் பாரதத்திலிருந்து பிரிந்த போது, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என பிரிந்தது.
மதத்தால் இசுலாமியராயினும், இனத்தால் வங்காளிகளாக இருந்தனர் கிழக்கு பாகிஸ்தானிய (இன்றைய பங்களாதேஷ்) மக்கள், அவர்கள் தாங்கள் மேற்கு பாகிஸ்தானால் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எண்ண துவங்கினர்.


வங்காள மொழி தேசிய மொழி ஆக்கப்படாதது, மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சரியான நிதி ஒதுக்காதது, சரியான உள்கட்டமைப்பு செய்யாதது போன்ற காரணங்களால் கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் மேற்கு பாகிஸ்தானிடம் வெறுப்படைந்திருந்தனர்.


அப்போது நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின்முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் 167 இடங்களில் (167/331 ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை) வெற்றி பெற்று அரசமைக்க பாகிஸ்தான் அதிபர்யாஹ்யா கானிடம் உரிமை கோரியது. ஆனால் அவரோ கிழக்கு பாகிஸ்தான் மேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். முஜிபுரை மேற்கு பாகிஸ்தானுக்கு கைது செய்து கொண்டு செல்லப்பட்டார். அவாமி லீக் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். மேற்கு பாகிஸ்தான் மக்கள் கிழக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பலரும் அகதிகளாக பாரத நாட்டிற்கு புகலிடம் தேடி வந்தனர். இதனால் கோபமுற்ற மேற்கு பாகிஸ்தான், பாரதத்தின் மேல் பாகிஸ்தானிய விமான படை மூலமாக தாக்குதல் நடத்தி போரை தவிர்க்க முடியாததாக்கியது. டிசம்பர் 3ம் தேதி மேற்கு பாகிஸ்தான் மீதான போரை பாரதம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.


இது முன்கதை சுருக்கம்.


இதன் பின் நடந்தது வரலாறு. உலகில் உள்ள எந்த நாட்டின் ராணுவத்தாலும் செய்ய முடியாத ஒரு மகத்தான வெற்றியை நம் ராணுவம் எய்தியது. தரை, வான் மற்றும் கடல் படைகள் மேற்கு பாகிஸ்தானின் மேல் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டின. அப்போது நம் ராணுவத்தினர் செய்த சில சாகசங்களை பட்டியலிடுகிறேன்.


1. வான் வழி (Indian Air force)




IAF in Action


டிசம்பர் 5 : ஸ்குவாட்ரன் லீடர் பாலி தலைமையில் அன்று முழுவதும் நம் நாட்டின் விமானப் படை அடுத்தடுத்த தாக்குதல் மூலமாக எதிரி நிலைகளை கடும் சேதாரத்திற்கு உள்ளாக்கி அவர்களின் போர் வியூகத்தை உடைத்தது. அதில் பாகிஸ்தானின் 54 T-59 மற்றும் ஷெர்மன் டாங்குகளில் 40 முற்றிலும் அழிக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன. 138 மற்ற வாகனங்களும், 5 பீல்டு கன்களும் மற்றும் 3 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் அழிக்கப்பட்டன.


சண்டை நடைபெற்ற லோங்கேவாலா பாலைவன பகுதி இரும்பு சுடுகாடு போல காட்சியளித்தது. அங்கே இருந்த எதிரி டாங்குகள் பாலை மணலில் கிறுக்கு பிடித்தவைபோல சுற்றி சுற்றி மணலை கிளப்பி விட்டு தங்களை காத்துக் கொள்ளப் பார்த்தன. எனினும் அவை தப்பிக்க முடியவில்லை.




டாங்கு தடங்கள்


மேலே காணப்படும் படம் விங் கமாண்டர் RS பெனெகல் என்பவரால் பிடிக்கப்பட்டது. இன்று இது வாயு பவனின் (விமானப்படை தலைமையகம்) நுழைவு வாயிலை அலங்கரிக்கின்றது.


அப்பொது பாகிஸ்தானிய படை அனுப்பிய செய்தியை ராணுவம் இடைமறித்து கேட்ட செய்தி, கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


“The enemy air force has been creating havoc – One aircraft leaves and another comes and stays overhead for twenty minutes. 40% troops and tanks have been destroyed, injured or damaged. Further advance has become very difficult. Send air force for help as soon as possible otherwise even a safe withdrawal would be difficult.”


இதன் பிறகு நம்முடைய தரைப்படை எளிதாக டாக்காவைக் கைப்பற்றி பாகிஸ்தானிய ராணுவம் முன்னேறாமல் தடுத்தது.


2. கப்பல் படை (Indian Navy)


பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமேரிக்கா தனது மாபெரும் போர்க்கப்பலான USS Enterprise ஐ வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது.




USS Enterprise – The Big ‘E’


அதன் பிரமாண்டத்தின் காரணமாக அது The Big ‘E’ என்று அழைக்கப்பட்டது. 90 போர் விமானங்கள், 3000 வீரர்கள், 1800 போர் விமானிகள் மற்றும் பல வகையான ஆயுதங்கள் கொண்டு ஒரு மிதக்கும் ராணுவமாக இருந்தது. அதை எதிர்கொண்ட நமது நாட்டின் கப்பல் படை தளபதி எதிர்கொண்ட விதம் நமக்கு நிச்சயம் வியப்பளிக்கும்.


அதை அவரே விவரித்திருக்கிறார் :


“டிசம்பர் 15 அன்று INS Vikrant தனது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எனக்கு BBC மூலமாக Big E வங்காள விரிகுடா நோக்கி வருவது பற்றி தெரிந்தது. தலைமையகத்திலிருந்து குறிப்பு வருமென்று காத்திருந்தேன், ஆனால் எதுவும் வரவில்லை. அன்றிரவு நானே முடிவெடுத்து Big E போர் களத்திற்கு வருமுன்னரே தடுத்து நிறுத்த புறப்பட்டேன். அப்போது ஒரு ஊழியர் என்னிடம் கேள்வி கேட்க அனுமதி கேட்டார், நானும் அனுமதித்தேன். அவர் ஐயா! Big ‘E’ ஐ பார்த்ததும் என்ன செய்வீர்கள்?


இதே கேள்வி தான் என் மூளையையும் குடைந்து கொண்டிருந்தது, இருந்தும் நான் தயங்காமல் கூறினேன் “கவலைபடாதே இளைஞனே! அமேரிக்கா ஒரு நட்பான நாடு, அதனால் வரவேற்பு கூறி தங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்பேன்” என்றேன்.


அதற்கும் அந்த ஊழியர் திருப்தி அடையாமல் “அது நம் மீது தாக்குதலை ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.


எனக்கு கப்பற்படை கல்லூரியில் பயின்றிருக்கிறேன் மற்றும் எனக்கு அமெரிக்கர்களின் உளவியலும் தெரியும். ஒருவேளை Big ‘E’ நம்மை தாக்கினால், ஆபிரகால் லிங்கன் தன் கல்லறையிலிருந்து எழுந்து பார்ப்பார் (Improbable)”


என்ன ஒரு துணிச்சல் இருந்தால் இப்படி ஒருவரால் கூற முடியும். INS Vikrant மற்றும் Big ‘E’ பற்றிய ஒப்புமை காண இந்த சுட்டியை பார்க்கவும், ஒரு மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் தெரியும்.


3. காலாட்படை (Indian Army)


டிசம்பர் 16 அன்று லெப்டினன்ட் கலனல் ஹனூத் சிங் கௌர் தலைமையில் 47 பேர் கொண்ட படை பிரிவு பசந்தார் ஆற்றுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் தரைபடை எளிதாக உள்ளே சென்று எதிரிகளை தாக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தது. எதிரிகளின் கவச வியூகத்தை (armour attack) தகர்த்து தனியொரு ஆளாக தீரத்துடன் செயற்பட்டு தன் படைக்கு ஒரு முன் உதாரணமாக இருந்தார்.




கெடு




சரணடைந்த பத்திரம்


இதனால் எழுச்சி பெற்ற வீரர்கள் பாகிஸ்தானின் 48 டாங்குகளை தகர்த்தெறிந்தனர். இவரை பசண்டார் போரின் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.


இது போன்ற எண்ணற்ற வீரர்களின் சாகசங்களால், மேற்கு பாகிஸ்தானின் ராணுவ தளபதி நியாசி போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால் நம் நாட்டின் ராணுவ தளபதி போர் நிறுத்தத்தை ஏற்காமல் முழுவதுமாக சரணடைய கேடு விதித்தார். இது ராணுவ வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த முடிவாக கருதப்படுகிறது.


அதனால் 90,368 பேர் சரணடைந்தார்கள். அது வரை எந்த நாட்டின் ராணுவ வரலாற்றிலும் இடம் பெறாத அதிசய உண்மை. 13 நாளில் போர் முடிவுக்கு வந்தது.


சரணடைந்தவர்கள் எண்ணிக்கை:


Branch captured Pakistani POWs



Army 

54,154 


Navy 

1,381 


Air Force 

833 


Paramilitary including police 

22,000 


Civilian personnel 

12,000 


Total 

90,368 



பாரதம் 1971 பாகிஸ்தானுக்கு எதிரான போரில் புகழ் வாய்ந்த ஒரு வெற்றியை பெற்றது. இதுவே நூற்றாண்டுகளில், ஒரு பெரிய போரின், மிக தீர்க்கமாக பெறப்பட்ட வெற்றியாகும். பாரதம் தனியொரு நாடாக இருந்து, ஐ.நா சபை உறுப்பு நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஒரு வல்லரசையும் மீறி அடைந்த வெற்றி. இது பாரத வரலாற்றில், ஒவ்வொரு தேசப்பக்தனும் பெருமை கொள்ளக் கூடிய மின்னும் அத்தியாயமாகும்.


கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற நாடாக உருவானது. இதன் மூலமாக சுதந்திரமடைந்தது அதன் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி உண்டானது,
கொசுறு :
பாகிஸ்தான் தான் செய்த தவறை மறைத்து, தான் தோற்றதையே ஒரு தபால் தலையாக வெளியிட்டு தன் தலையில் தானே மண் வாரி இறைத்துக் கொண்ட ‘துன்பியல்’ சிரிப்பும் நடைபெற்றது. இதில் இடம்பெற்றுள்ள வாசங்கங்களை படித்துப் பார்த்தால் மேற்கு பாகிஸ்தானால் கொல்லப்பட்ட 3 லட்சம் பங்களாதேஷ் மக்களின் ஆன்மா சும்மா விடுமா.




பாகிஸ்தானின் கேலிக் கூத்து

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement