Ad Code

Responsive Advertisement

கேள்விகளை புரிந்து பதில் அளித்தால் 100 மதிப்பெண் பெறலாம் : 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் "அட்வைஸ்'

"தினமலர்' மற்றும் கல்வி மலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் நெய்வேலியில் நேற்று நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து மாணவர்களுக்கு பாட வாரியாக ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

பாலசுப்ரமணியன் (தமிழ்)
ஒரு மதிப்பெண் கோள்விகளுக்கு ஆசிரியர் பெயர், வார்த்தையின் பொருள், நூல் ஆசிரியர்கள் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலாதி, திருக்குறள், கம்பராமாயணம், பெரியபுராணம், தமிழ் விடு தூது, தேவாரம், கலித்தொகை, நத்திகலம்பகம் ஆகிய பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். உரைநடையில் 1, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய பாடங்களில் 5 வினாக்கள் கேட்கப்படும். 4 மதிப்பெண் வினாக்கள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீராப்புராணம், நற்றினை அல்லது புறநானூறு ஆகிய பாடங்களில் இருந்து 5 முதல் 3 வினாக்களுக்கு விடை அளித்தால் போதும். இரண்டாம் தாளில் பக்கம் 28, 83, 122, 132,,142, 146, 179, 180, 192 , 222, 224 ஆகியவற்றை நன்றாக படிக்க வேண்டும். இலக்கணத்தில் அணி, அலக்கீட்டு வாய்ப்பாடு, பா வகை ஆகியவற்றை அவசியம் படிக்க வேண்டும்.

மூர்த்தி (ஆங்கிலம்)
ஒரு மதிப்பெண் வினாவிற்கு பாடத்தில் உள்ள அனைத்து வர்த்தைகளையும் படிக்க வேண்டியது இல்லை. சென்ற தேர்வில் கேட்கப்பட்ட வார்த்தை, முக்கிய வார்த்தைகளை படிக்க வேண்டும். அனைத்து வார்த்தைகளுக்கும் பொருள் அறிந்திருக்க வேண்டும். கேள்விகள் எந்த அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதை அறிந்து ஒழுங்காக பதில் அளித்தால் 100 மதிப்பெண் பெற முடியும். ஒரு மதிப்பெண் வினா, இரண்டு மதிப்பெண் வினா, ஐந்து மதிப்பெண் வினா என ஒப்பிட்டு படிக்க வேண்டும். பொருத்துதல், தமிழாக்கம் செய்தல் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இரண்டாம் தாளில் 7 கதைகளில் உள்ள பெயர்கள், கதாபாத்திரம், அதில் வரும் சம்பவங்கள் நன்கு அறித்து வைத்து கொள்ள வேண்டும். படத்தை பார்த்து விடை அளித்தல். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகுந்தார் போல் படம் வரைதல் போன்றவற்றில் தவறு செய்யக் கூடாது.

வீரப்பன் (கணிதம்)
செய்முறை வடிவியல் பகுதியில் தொடுகோடு, நாற்கரம், வட்டநாற்கரம், முக்கோணவியல் இவற்றில் ஏதேனும் இரண்டை பயிற்சி செய்தால் போதும். வரைபடம் 10.2 சிறப்பு வரைபடங்கள் 9 கணக்குகள் போட்டு பார்த்தால் போதும். ஒரு மதிப்பெண் வினாக்கள் புரிந்து கற்று கொண்டால் மட்டுமே 100 மதிப்பெண் முழுமையாக பெற முடியும், இயற்கணிதத்தில் காரணிபடுத்துக, வர்க்க மூலம், அணிகள், தேற்றங்கள் 6.1, 6.3, 6.5 நிகழ்தகவு இப்பாட பிரிவுகளில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் கோண இருசம வெட்டு தேற்றங்கள், மருதலையும், பிதாகரஸ் தேற்றம், திட்ட விளக்கம், மாறுப்பாட்டு கெழு அவசியம்.

பசுபதிராஜன் (அறிவியல்)
வினா தாளில் 55 மதிப்பெண்களுக்கு விடை இருக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அனைத்து குறியீடுகள், அறிந்து கொள்ள வேண்டும். 2 மதிப்பெண் வினாக்கள் இயற்பியல், வேதியியலில் இருந்து தலா 8 வினாக்களும், உயிரியலில் இருந்து 14 வினாக்களும் கேட்கப்படும்.
வரைபடங்களை வரைந்து பயிற்சி செய்து கொள்ள வேண்டும். வரை படத்தை கொடுத்து அதில் பாகங்களை குறித்தல் வினாவில் உரிய இடத்தில் சுட்டிகாட்டி எழுத வேண்டும். நரம்பு செல், மூளை, நெப்ரான், வோல்டாஸ் மின்கலம், கணையம், அட்ரினல்சுரப்பி, தைராய்டு, கருவுறுதல் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் பாட கணக்குகளுக்கு ஸ்டெப் மதிப்பெண் வழங்கப்படும்.
எனவே கணக்கை ஸ்டெப், ஸ்டெப் ஆக போட வேண்டும்.புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்களை படித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

பாலு, (சமூக அறிவியல்)
புத்தகத்தின் பின்னால் உள்ள கேள்விகள் 98 சதவீதம் கேட்கப்படும். அதில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருத்துதல், தலைவர்களின் நாடு, யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள், புரட்சிகள் அதற்கு தலைமை தாங்கியவர்கள் பற்றி முழுமையாக படிக்க வேண்டும். இரண்டு மதிப்பெண் வினாவில் முதல் 5 பாடங்களில் மூன்று வினாக்களும், 6 முதல் 10 வரை மூன்று வினாக்களும், 11 முதல் 14 வரை இரண்டு வினாக்களும், புவியியலில் 1, 2, 3, 7 ஆகிய பாடங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும். தலைப்பு வினாக்கள் பாடம் 1 முதல் 8 வரை இரண்டு வினாக்களும், 9 முதல் 14 வரை இரண்டு வினாக்களும் கேட்கப்படும்.
5 மதிப்பெண் வினாக்களுக்கு வரலாற்றில் காரணங்கள், விளைவுகள் போன்ற கேள்விகள் அவசியம். வரைபடத்தில் காற்று வீசுதல், இந்தியா எல்லை பகுதிகள், புவியியல் வரைபடம், சிகரம், மலைப்பகுதி, ஆறுகள், மண், வேளாண்மை, கனிம வளங்கள், வெப்ப மண்டலம், காடுகள் குறித்து நன்கு அறிந்து வைத்து கொள்ள வேண்டும். காலகோடுகள் முழு பக்கத்தில் பென்சில் கொண்டு வரைய வேண்டும். நிகழ்வுகளை எழுதும் போது முக்கியமான ஆசிரியர்கள் அறிந்த நிகழ்வுகளை எழுத வேண்டும். புவியியலில் தொலை நுண்ணுணர்வு பாடத்தில் 5 மதிப்பெண் கேட்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement