Ad Code

Responsive Advertisement

TRB : உதவி பேராசிரியர் பணி நேர்முக தேர்வுக்கு அழைப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,064 உதவி பேராசிரியர் நியமன விவகாரத்தில், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, ஆறு பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, ஆங்கிலம் உள்ளிட்ட, சில பாடங்களுக்கு, நேர்முகத் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டுவிட்டது.
தற்போது, வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, சுற்றுலா, சுற்றுலா மற்றும் சுற்றுலா நிர்வாகம் ஆகிய, ஆறு பாடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. நேர்முகத் தேர்வு, வரும் 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சென்னையில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும் எனவும், அழைக்கப்பட்டு உள்ளவர் விவரம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, அழைப்புக் கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உதவி பேராசிரியர் தேர்வுக்கு, கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், கல்வித்தகுதிக்கு, 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண் அடிப் படையில், இறுதியாக, தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement