Ad Code

Responsive Advertisement

TNPSC : குரூப் - 4 தேர்வு இன்று கடைசி நாள்

 குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5,000 இடங்களுக்கு, டிசம்பர் 21ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.
இதற்கு, அக்டோபர் 14ம் தேதி முதல், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, இன்று கடைசி நாள். இன்று நள்ளிரவு, 12:00 மணி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, 14ம் தேதி கடைசி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) (காலி பணியிடம் 39) இளநிலை உதவியாளர் (பிணையமற் றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர் -22, வரைவாளர்-53, நில அளவர்-702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அக்டோபர் 14ல் அறிவித்தது. அன்றைய தினமே இணையதளம் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் என்று போட்டி போட்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.நேற்று மாலை நிலவரப்படி தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியதாக கூறப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இதனால், எண்ணிக்கை மேலும் உயரும்.

இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்றாலும், தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள், அஞ்சலகங்களில் செலுத்த வருகிற 14ம் தேதி வரை செலுத்தலாம் என்று டி.என்.பி. எஸ்.சி. அறிவித்துள்ளது. இதையடுத்து டிசம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகா என 244 மையங்கள் அமைக்கப்பட உள்ளன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement