Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு பாட புத்தகம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாட நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பாடப்பிரிவுகளில் சுமார் 16 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகிறது. அதில் பெரும்பாலான புத்தகங்கள் அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மே மாத கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் முதல் நாளே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சில்லறை விற்பனை கடைகளில் விலை கொடு த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஏற்ப அந்தந்த பள்ளி நிர்வாகங்களே பணம் செலுத்தி தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து வாங்கிக் கொடுக்கின்றனர். இந்நிலையில், 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வு எழுதி முடித்ததும் இரண் டாம் பருவத்துக்கு தயாராக வேண்டும். 

அதாவது டிசம்பர் மாதம் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கும். அதே நேரத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடங்களை தனியார் பள்ளி ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அதனால், 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் டிசம்பர் மாதங்களில் பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தங்களை வாங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதே போல அரசுப் பள்ளிகளிலும் நடத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் 9ம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வாங்க கடை கடையாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிடும் புத்தகங்களில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சில்லறை விற்பனைக்கு ஒதுக்கி தனியார் புத்தக கடைகளுக்கு கொடுக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு பாடநூல் கழகமே கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்தில் சில்லறை விற்பனையும் செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக கிராக்கி ஏற்படுவது வழக்கம். இது தெரிந்திருந்தும் சில்லறை விற்பனையில் குறைவான புத்தகங்களை விற்பனை செய்வதை தமிழ் நாடு பாடநூல் கழகம் வழக்கமாக வைத்துள்ளது. இ ந்த ஆண்டுக்கான புத்தகங்கள் அச்சிட்டதில் கடந்த ஒரு மாதமாகவே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் தமிழ் நாடு பாடநூல் கழகத்தில் ஸ்டாக் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். அதேபோல சென்னையில் உ ள்ள எந்த சில்லறை விற்பனை கடைகளிலும் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி பத்தாம் வகுப்பு புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் தெரிவித்தும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மவுனம் சாதித்து வருகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement