Ad Code

Responsive Advertisement

சான்றிதழ் நகல்களில் சுயச் சான்று போதுமானது: யுஜிசி

சான்றிதழ்களின் நகல்களில் மாணவர்களின் சுயச் சான்று போதுமானது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு:

ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதுபோல, உண்மையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் இடங்களில் மாணவர்களிடம் சுயச் சான்று செய்த மதிப்பெண் சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றால் போதுமானது.

உண்மைச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படாத இடங்களில் மட்டும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலரின் அத்தாட்சியுடன் கூடிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் முறையைத் தொடரலாம். இதை அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்து, அடுத்த 15 நாள்களுக்குள் அதுதொடர்பான அறிக்கையை யுஜிசிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement