அரசு உத்தரவின் படி, கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம் எப்போது வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலரின் கட்டுப்பாட்டில், 263 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில், 2000 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 19 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கான, கல்விக்கட்டணத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தது. தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கப்பட்ட மாணவர்களின் முழு விபரம், கட்டண தொகைக்கான விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'கோவை மாவட்டத்தில், உள்ள பள்ளிகளுக்கான கட்டணம் நான்கு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தெளிவான தகவல் விரைவில் வெளியிடப்படும். கட்டணங்கள் குறித்த விபரங்கள் கல்வி அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.தனியார் பள்ளிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் மாயாதேவி கூறுகையில்,''கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரசு அறிவுறுத்தலின் படி புதிய வங்கிக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில், கட்டணத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை