நீங்கள் தேர்விற்கு படிக்கும் போது புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே, படித்த ஒவ்வொன்றையும் எழுதி பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்தது மறக்காமல் இருக்கும்.
இவ்வாறு செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும். தேர்விற்கு ஒன்று அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதிதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும். படிக்கும் போது நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது. மேலும், படிக்கும் போது பாடங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக்கொண்டால் ரிவிசன் செய்யும் போது உதவியாக இருக்கும்.
படிக்கும் போது டிவி பார்ப்பது, பிறருடன் பேசுவதை தவிர்க்கவும். இதற்கு பெற்றோர் உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிக்காமல் படுக்கைக்கு செல்லவும். அதிகாலை எழுந்து படித்தல் நல்லது. தேர்விற்கு முந்தைய நாள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை, கைகடிகாரம் என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேர்விற்கு பழகிய பேனாக்களை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் வேகம் கிடைக்கும். கையெழுத்து அழகாகவும் இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு ஆரோக்கியமான காலை உணவை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை