Ad Code

Responsive Advertisement

சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,' என இணை இயக்குனர் அமுதவல்லியிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க கள்ளர் பிரிவு மாநில செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கநாதன் கூறியதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் 109 பேர் பள்ளிக் கல்வித் துறை மாறுதல் கேட்டு ஆறு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். கள்ளர் பிரிவில் 140 ஆசிரியர் காலிப் பணியிடங்களும் உள்ளன. தற்போது இத்துறையில் காலியான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நவ., 25, 26ல் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் நடத்தும் முன் கல்வி துறைக்கு மாற்றம் கேட்டு சொந்த மாவட்டங்களுக்கு திரும்புதற்காக காத்திருக்கும் 109 ஆசிரியர்களுக்கு துறை மாறுதல் உத்தரவுகள் வேண்டும். நவ.,25, 26ல் நடக்கும் கவுன்சிலிங்கில் அதிக இடங்கள் காலியாக இருக்கும். இதுகுறித்து இணை இயக்குனரிடம் வலியுறுத்தினோம், என்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement