Ad Code

Responsive Advertisement

தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவி: ஏழ்மையிலும் சாதனை


காரைக்குடியில் நடக்கும் மாநில சைக்கிள் போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பள்ளி மாணவி 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். காரைக்குடியில் மாநில சைக்கிள் போட்டி கடந்த 7 ல் துவங்கியது. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, 14,16 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
முதல் நாள் நடந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்ட டிரக் பிரிவில் 2 ம் இடமும், 16 வயது பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றார். நேற்று நடந்த 14 வயதுக்குட்பட்ட 800 மீட்டர் குழு போட்டியில் இரண்டாமிடம், 16 வயதுக்குட்பட்ட 1200 மீட்டர் போட்டியில் மூன்றாம் இடம், 16 வயதுக்குட்பட்ட தனிநபர், குழு, டிரக், ரோடு என சைக்கிளிங் போட்டி எதுவாக இருந்தாலும், அதில் பங்கேற்று வருகிறார் இந்த மாணவி.சொந்த ஊர் திருவானைக்காவல். தந்தை ஜெயராமன், தாய் சசிகலா. பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். விளையாட்டாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தவர் உள்ளூர் அளவில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நடந்த போட்டியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பயன்படுத்தி கொண்டவர் ஐஸ்வர்யாவின் பெரியப்பா ஆறுமுகம். இவர், ஒரு சைக்கிளிங் வீரர். தன்னால் பெற முடியாத வெற்றியை தம்பியின் மகளுக்கு உரித்தாக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறார்.

கர்நாடகாவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள ஐஸ்வர்யா கூறியதாவது: இதுவரை சைக்கிள் போட்டியில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் 11 மெடல் வாங்கியுள்ளேன். சில மாதங்களுக்கு முன் திருச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால் விருது வாங்கினேன்.போட்டியில் பங்கேற்கும் சைக்கிள் ரூ.2 லட்சம் வரை ஆகிறது. ஸ்பான்சர் செய்தால் மேலும் வெற்றி பெற வசதியாக இருக்கும், என்றார்.இவருக்கு உதவ 94439 19393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement