Ad Code

Responsive Advertisement

சிறந்த வகுப்பறை நடைமுறைகள்: ஆராய்ச்சி கட்டுரைக்கு அழைப்பு

சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்க ஆசிரியர்களுக்கு, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறைக்கான நடைமுறைகளை கையாள்வது குறித்த கருத்தரங்கம் டிச.18, 19 ல் சென்னை பள்ளி கல்விஇயக்குனரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளனர்.

21-ம் நுாற்றாண்டில் சிறந்த வகுப்பறை நடைமுறை, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், பள்ளி மேம்பாட்டுக்கு தேவையான நடைமுறைகள், புதிய தொழில் நுட்பத்தில் உள்ளடங்கிய வகுப்பறை எனும் ஐந்து தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும். அறிமுக கட்டுரையை நவ.15 க்குள் சென்னை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்வாகும் கல்வியாளர்கள் பட்டியல் நவ., 20 க்குள் வெளியாகும்.முழு அளவிலான கட்டுரையை நவ., 28 க்குள் அனுப்பவேண்டும். ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, சென்னை கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement