விடுப்பில் வெளிநாடு சென்ற ஆசிரியையின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. பரமக்குடி பாரதியார் நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியை விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:
எனது மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு உதவ, 2014 ஜூன் 11 முதல் அக்.,5 வரை அமெரிக்கா செல்ல பள்ளிக்குழு ஈட்டா விடுப்பு அனுமதித்தது. பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
நான் ஊருக்கு திரும்பியதும் செப்.,16 ல் பணியில் சேர்ந்தேன். விடுப்பில் சென்ற 97 நாட்களுக்கான சம்பளம் அனுமதிக்கக்கோரி, பள்ளி நிர்வாகம் ராமநாதபுரம் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தது. ஆனால் இயக்குனரின் முன் அனுமதியின்றி வெளிநாடு சென்றதாகக்கூறி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அந்நடவடிக்கை முடிந்த பின் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து, விண்ணப்பத்தை பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் நிராகரித்தார். தனியார் பள்ளி விதிகள்படி, பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தால் போதுமானது. நான் அளித்த தகவல்களை, கல்வி அதிகாரிகளிடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதியில்லாமல் வெளிநாடு சென்றதாகக் கூறுவது தவறு. உதவி துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார். உதவி துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவிற்கு நீதிபதி தடை விதித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை