Ad Code

Responsive Advertisement

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு ரத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு

அருந்த தியினருக்கு வழங்கப்பட்ட 3 சதவீத இடஒதுக்கீட்டை  ரத்து செய்யக்கூடாது என்று அருந்ததி மக்கள் கட்சி சார்பில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான  இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு  அளிக்கும் சட்டத்தை 2009ல்  கொண்டு வந்தது. இந்த சட்டத்தினால்,  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த  சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
அருந்ததியர்களுக்கு  இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி வக்கீல்  சரவணன் உயர் நீதிமன்றத் தில் மனு செய்தார். மனுவை நீதிபதிகள்  அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து அரசு பதில் அளிக்க  நோட்டீஸ் அனுப்பினர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக  சேர்க்கக் கோரி வலசை ரவிசந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.  அதில் கூறியிருப்பதாவது: அருந்ததியர் மக்கள் கட்சியின் தலைவராக  உள்ளேன். தாழ்த்தப்பட்ட பிரிவில், அருந்ததியர் மக்கள்  பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், எங்கள் மக்களிடம் கல்வி  மற்றும் வேலை வாய்ப்பு விவரங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு  இல்லாததால், இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்க முடியாத  நிலையில் உள்ளனர்.

எனவே, எங்கள் மக்கள் துப்புரவு தொழிலாளியாகவும், கொத்தடிமை  தொழிலாளியாகவும், செருப்பு தைக்கும் தொழிலாளியாகவும் உள்ளனர்.  இதனால், அரசு பணி நியமனத்திலும் அரசு மற்றும் தனியார் கல்வி  நிறுவனங்களிலும் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009ம் ஆண்டு அரசு  சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திருத்தத்தை இந்த  ஐகோர்ட்டு ரத்து செய்தாலோ, தடை விதித்தாலோ அது எங்கள் சமு  தாய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, என்னையும் ஒரு  மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement