Ad Code

Responsive Advertisement

மாணவியின் நெற்றியில் பேனாவால் எழுதிய ஆசிரியை - தாசில்தார் விசாரணை

வால்பாறை அருகே  வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை பகுதியில் ஆங்கிலப்பள்ளி (நர்சரி) செயல்படுகிறது. இந்த பள்ளியில் வால்பாறை நகரை சேர்ந்த மாணவி, ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லும்போது, வீட்டு பாட நோட்டு கொண்டு செல்லவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த, பள்ளி ஆசிரியை அவரது நெற்றியில் homework செய்யவில்லை என்று பேனாவால் எழுதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் நேரு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவியின் தாயிடம் நேரில் விசாரணை நடத்தினார். அதன் அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement