'அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங் கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம்' என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என, அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. நாடு முழுவதும் செயல்படும், பல்கலைகள், அவை அனுமதி பெற்றுள்ள வரம்பிற்குள் மட்டுமே, கல்வி வளாகங்கள், கல்வி மையங்களை அமைக்க முடியும். வரம்பை தாண்டி கல்வி மையங்களை அமைக்கக் கூடாது என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. மேலும், அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற மையங்கள் என, செயல்படும் சிறிய கல்வி மையங்கள் பல, அனுமதி பெறாத பல படிப்புகளை நடத்தி வருவதாக, புகார்கள் எழுந்தன. இப்புகார்கள் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி, இது குறித்த பொது அறிவிப்பு ஒன்றை, யு.ஜி.சி., வெளியிட்டது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத, கல்வி மையங்கள், வளாக மையங்கள் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை யு.ஜி.சி., கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அதே பொது அறிவிப்பை, யு.ஜி.சி., வெளியிட்டு, இது போன்ற, அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களில் சேர வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை