Ad Code

Responsive Advertisement

தொடக்க கல்வித்துறை : 8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது  ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதற்கான கவுன்சலிங் 8ம் தேதி இணைய தளம் மூலம் நடக்கிறது. எனவே சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக டிஆர்பி தெரிவு செய்துள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முகவரி உள்ள மாவட்டத்தில்  உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 8ம் தேதி காலை 9 மணிக்கு ஆஜராகவேண்டும். அப்போது தங்களின் அசல் கல்விச் சான்றுகள், அதன் நகல்கள் தலா 2 எடுத்து  செல்ல வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement